தமிழகத்தில் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவங்களுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
ஈழ விடுதலைப் போராளி மறைந்த திலீபனின் நினைவு தினம் சென்னையில் மதிமுக தலைமையகத்தில் அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப் படத்திற்கு, வைகோ மரியாதை செலுத்தினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, சிந்தனையாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறினார்.
மதச்சார்பின்மையை சிதைத்து, நல்லிணக்கத்தை குலைக்க சதி நடப்பதாக குற்றம்சாட்டிய அவர், இந்துத்வா சக்திகளின் பின்னணியில் மத்திய ஆளும் அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நீதி மற்றும் காவல்துறையை விமர்சித்த எச்.ராஜா, காவல்துறையின் பாதுகாப்புடன் ஆளுநரை சந்திப்பது எந்த வகையில் நியாயம் எனவும் வைகோ கேள்வி எழுப்பினார்.