சட்டப்பேரவையை முன்கூட்டியே கலைத்தால் தேர்தல் நடத்தை விதி அமல்- தேர்தல் ஆணையம்

சட்டப்பேரவையை முன்கூட்டியே கலைத்தால் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வரும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பதவிக் காலங்கள் முடியும் முன்பு சட்டப்பேரவை கலைக்கப்படும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம், தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. அதன்படி, சட்டப்பேரவை கலைக்கப்பட்டதும், புதிய தேர்தல் நடைபெறும் வரையில், தேர்தல் நடத்தை விதிமுறை உடனடியாக அமலுக்கு வரும் என்று கூறியுள்ளது. மேலும் சட்டப்பேரவை கலைக்கப்பட்ட பின் உள்ள இடைக்கால அரசு, அன்றாடப் பணிகளை மட்டுமே செய்ய முடியும் என்றும், கொள்கை முடிவுகள் எதையும் எடுக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டி உள்ளது. அதேபோல், சட்டப்பேரவை கலைக்கப்பட்ட மாநிலத்துக்கு மத்திய அரசும் எந்த ஒரு புதிய திட்டங்களையும் அறிவிக்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் ஆட்சி முன்கூட்டியே கலைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 1994ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், இந்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version