கோவா அரசியலில் பரபரப்பு – ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்! 

கோவாவில் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 16 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

எனினும் 14 இடங்களை வென்ற பா.ஜ.க. இதர கூட்டணி கட்சிகள் துணையோடு ஆட்சியில் அமர்ந்தது.

 முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், கோவா அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்  கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 14 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஆளுநர் மாளிகையில் சமர்பிக்கப்பட்டது.  

ஆளுநர் மாளிகை வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த கோவா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சந்திரகாந்த் கவேல்கர், தேர்தல் நடந்து முடிந்து 18 மாதங்களே ஆன நிலையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

ஏற்கனவே தனிப்பெரும் கட்சியாக உள்ள தங்களை ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலையில், தற்போதாவது, தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் கடிதம் அளித்துள்ளதாகவும், ஆளுநரை விரைவில் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் கோவா அரசியல் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.

Exit mobile version