கேரள அரசின் அனுமதியால் பெரியார், இடுக்கி அணைகளுக்கு பாதிப்பு அபாயம்

கேரள மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலமான தவளைப் பாறைகளை, வெடி வைத்து உடைக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளதால், முல்லை பெரியார் மற்றும் இடுக்கி அணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

பீர்மேடு அருகே வாகமண் என்னும் இடத்தில், 64 ஏக்கர் பரப்பளவில் உள்ள தவளைப் பாறையை வெடிகள் வைத்து உடைத்து எடுப்பதற்காக, முதல் கட்டமாக 36 ஏக்கருக்கு கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மக்களின் நலன் கருதாமல் பாறைகளை உடைத்து எடுக்க கேரள அரசு அனுமதியளித்துள்ளது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தவளைப் பாறைகளை வெடி வைத்து தகர்த்தால், முல்லை பெரியார் மற்றும் இடுக்கி அணைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், இயற்கை வளங்களும் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாறையை உடைக்க அரசு வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கேரளா அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Exit mobile version