சிவகங்கையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் காய்கறிகள் சாகுபடி கருத்தரங்கு நடைபெற்றது.
நவீன தொழில் நுட்பத்தை சாகுபடியில் பயன்படுத்தி இரண்டு மடங்கு உற்பத்தியை பெருக்குவது, மூன்று மடங்கு லாபத்தை விவசாயிகள் ஈட்டுவது குறித்து இதில் அலோசிக்கப்பட்டது. இந்த கருத்தரங்கை அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்.
விவசாயிகளுக்கு 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், மழையின் அளவு குறைந்து வருவதால், நீண்ட கால பயிர்களை சாகுபடி செய்வதை விவசாயிகள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சாகுபடி செய்த பொருட்களை நவீன குளிர்சாதன வசதிகள் கொண்ட சேமிப்பு கிடங்குகளில் சேமித்து, நல்ல விலை வரும் போது அவற்றை விற்பனை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.