குட்கா ஊழல் தொடர்பாக 40 இடங்களில் சிபிஐ சோதனை

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குட்கா ஊழல் தொடர்பான வழக்கு லஞ்ச ஒழிப்புதுறையிடம் இருந்து சமீபத்தில் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சென்னையில் குட்கா கிடங்குகளில் சோதனை நடத்தப்பட்டது. ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாதவராவின் குட்கா கிடங்கில் சோதனையிட்ட சிபிஐ அதிகாரிகள், அதற்கு சீல் வைத்தனர்.

இந்தநிலையில், குட்கா வழக்கில் சிபிஐ பிடி இறுகியுள்ளது. காவல்துறை டிஜிபி. ராஜேந்திரன், சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 40 இடங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version