கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 60 பேர் பலி

 

ஏதென்ஸ் நகருக்கு அருகே உள்ள கிழக்கு மற்றும்  மேற்கு கடற்கரையோரங்களில் உள்ள வனப்பகுதிகளில் நேற்று முன்தினம் காட்டுத்தீ ஏற்பட்டது. அங்குள்ள கடற்கரை பகுதியில் இருந்தவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் 30 தீயணைப்பு வாகனங்களுடன் 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், காட்டுத்தீயில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. இதனிடையே தற்போது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் ஏராளமான வீடுகள் தீக்கிரையானதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Exit mobile version