கிணற்றின் சிமெண்ட் சிலாப் உடைந்தது – 3 பெண்கள் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அடுத்துள்ளது சூர்ய பிள்ளையார் குப்பம் என்னும் கிராமம் .

இவ்வூரில் இரவு முழுவதும் மழை பெய்தது.  காற்றும் பலமாக வீசியதால் மின் ஒயர்கள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் கிராம மக்கள் குடி தண்ணீர் எடுக்க கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் உள்ள, பொதுக் கிணற்றுக்கு சென்றனர்.

சிலர் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த நிலையில், கிணற்றை மூடிருந்த சிமெண்ட் சிலாப் மீது சிலர் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சிமெண்ட் சிலாப் உடைந்து ஒரு ஆண் மற்றும் ஏழு பெண்கள் கிணற்றுக்குள் விழுந்தனர்.
கிணற்றுக்குள் தண்ணீர் அதிகமாகவும் இருட்டாகவும் இருந்ததால் உடனடியாக யாரையும் மீட்க முடிய வில்லை.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செய்யூர் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

நாகப்பன், மல்லிகா, சிவகாமி, அம்சா, நீலாவதி ஆகிய 5 பேரை உயிருடன் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் சசி, மங்கை, கமலா ஆகிய மூன்று பெண்களும் தண்ணீருக்குள் விழுந்த சிமெண்ட் சிலாப்பிற்கு அடியில் மாட்டி கொண்டனர்.

 

Exit mobile version