பாகிஸ்தான் புதிய அதிபரான இம்ரான் கான், அமைதி பேச்சுவார்த்தை அண்மையில் அழைப்பு விடுத்தார். ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தீவிரவாத அமைப்புகள் காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் 8 இடங்களில் முகாமிட்டுள்ளன. 250 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருப்பதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
தீவிரவாதிகள் எளிதில் வந்து சென்ற 2 நிலைகள், துல்லிய தாக்குதலின் போது தகர்க்கப்பட்டன. அப்போது, அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மீண்டும் செயல்பட தொடங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. 2016ம் ஆண்டு துல்லிய தாக்குதல் நடத்தப்பட்ட போது, இருந்ததை விட தற்போது தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.