காதலர்களை கனெக்ட் செய்யும் எம்.எல்.ஏ! வந்தது வினை!

மகாராஷ்ட்ரா மாநில பாஜக எம்.எல்.ஏ. ராம் கதம் என்பவர், காதலிக்கும் பெண் அதனை ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அப்பெண்ணை கடத்தி சென்று, இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைக்க உதவி செய்வதாக பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இதற்காக தனது செல்போன் எண்ணையும் மேடையிலேயே அறிவித்தார். ராம்கதமின் இந்த பேச்ச அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தன்னடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதாக ராம் மற்றொரு வீடியோவை வெளியிட்டார். இருப்பினும் ராம்கதமின் பேச்சுக்கு எதிராக மகளிர் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பா.ஜ.க தலைமையை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுபத் சவ்ஜி, ராம் கதமின் நாக்கை வெட்டுவோருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version