காணாமல் போன கருணாநிதி, கொந்தளிக்கும் தயாநிதி

மு.க. அழகிரி மகன் தயாநிதி அழகிரி தனது டிவிட்டர் பக்கத்தில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணியை சாடியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், டி.ஆர். பாலுவை, திமுக-வின் முதன்மைச் செயலாளராக ஸ்டாலின் நியமித்துள்ளார். இதற்காக நன்றி தெரிவித்து சென்னையின் பல இடங்களில் டி.ஆர். பாலு ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியிருக்கிறார்கள்.

அதில் கருணாநிதியின் புகைப்படம் இடம்பெறவில்லை.

இந்தப் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தயாநிதி அழகிரி, தலைவர் படம் எங்கே? எனக் கேட்டுள்ளார்.

மறைந்து ஒரு மாதம் ஆன நிலையில், கருணாநிதி இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது திமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version