காஞ்சிபுரத்தில் தடுப்பணைகள் கட்ட விரைவில் நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்ட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விவசாய பெருமக்கள் வைத்த நியாயமான கோரிக்கைகள் மீது, நடவடிக்கை எடுக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், நெல் மற்றும் பால் கொள்முதல் விலைகளை உயர்த்தித் தர விவசாயிகள் வைத்த கோரிக்களை கனிவுடன் பரிசீலனை செய்வதாகவும் கூறினார். அப்போது, மழைப் பருவ காலத்திற்குள் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கேட்டதற்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்டத் தமிழக அரசு விரைவில் அரசாணை வெளியிடும் என்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நம்பிக்கைத் தெரிவித்தார்.

கூட்டத்தின் நிறைவாக, மக்கள் குறை தீர்வு கூட்டம் என்பதை, இனி விவசாயிகள் நலம் காக்கும் கூட்டம் என்று அழைக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.

 

Exit mobile version