கலிபோர்னியாவில் எரியும் காட்டு தீ….. தீயை அணைக்க முடியாமல் திணறும் வீரர்கள்

அமெரிக்காவின் காலிபோர்னியா வனப்பகுதியில் கடந்த ஒருவாரமாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டுவர ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டு வருகிறது. தீயை அணைக்கும் பணியில் 2 ஆயிரத்து 400 வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள  காட்டு மரங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. மெக்ஸிக்கோவில் இருந்து கனடாவிற்கு வரும் பசிபிக் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட இந்த காட்டு தீ பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக  கூறப்படுகிறது.

Exit mobile version