கர்நாடகாவில் பேருந்தை இயக்கிய குரங்கு- ஓட்டுனர் சஸ்பெண்ட்

 

கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் குரங்கை வைத்து பேருந்தை ஓட்டியதால் அதில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கர்நாடக மாநிலம் தவங்கரேயில் மாநில அரசுக்கு சொந்தமான கேஎஸ்ஆர்டிசி பேருந்து டெப்போ உள்ளது. இங்கு அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருபவர் பிரகாஷ். இவர் குரங்கு ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த குரங்கை வீட்டு வேலைகள் செய்யவும், தனக்கு உதவி செய்யவும் பல்வேறு பயிற்சி அளித்துள்ளார்.

இந்த நிலையில் தனது செல்லப்பிராணியான குரங்கை பணிக்கு அழைத்து வந்த பிரகாஷ், அதனிடம் பேருந்தை இயக்கும் பொறுப்பை கொடுத்துள்ளார். அந்த குரங்கும் எஜமானன் சொல்படி அழகாக பேருந்தை ஓட்டத்தொடங்கி விட்டது.

ஓட்டுநர் பிரகாஷ் கியர் மற்றும் பிரேக்கை மட்டும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, குரங்கு ஸ்டியரிங்கை பிடித்தபடி லாவகமாக ஓட்டியது. இதனால் அந்த பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த காட்சிகளை சிலர் மொபைல் போனில் படம் பிடித்து சமூகவலைதளங்களில் பரவிட்டுள்ளனர். இந்த நிலையில் ஓட்டுனர் பிரகாஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version