மதுரையில் பிரசித்தி பெற்ற முத்தீஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு இருமுறை, கருவறைக்குள் லிங்கத்தின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழும் அரிய நிகழ்வு நடைபெறுகிறது.
மார்ச் இரண்டாவது வாரத்தில் காலை வேளையில், கருவறைக்கு எதிரே உள்ள துவாரங்கள் வழியாக சூரியக்கதிர்கள் ஊடுருவி, லிங்கத்தின் மீது விழும். பின்னர், இரண்டாவது முறையாக செப்டம்பர் மாத இறுதியில், கருவறையில் லிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும்.
அந்த வகையில், லிங்கத்தின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் இன்று விழுந்தது. பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. இந்த அரிய நிகழ்வை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.