மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், செப்டம்பர் 20 நிலவரப்படி வழக்கமாக நெல் பயிரிடும் பரப்பைவிடக் கூடுதலாக இரண்டரை விழுக்காடு பரப்பில் நெல் பயிரிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதேபோல் வழக்கமாகக் கரும்பு பயிரிடும் பரப்பைவிடக் கூடுதலாக 12விழுக்காடு பரப்பில் கரும்பு பயிரிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய புன்செய்த் தானியங்கள் பயிரிடும் பரப்பு வழக்கத்தைவிட 4புள்ளி மூன்று விழுக்காடு குறைந்துள்ளது. அதேநேரம், பயறுவகைகள் பயிரிடும் பரப்பு கடந்த ஐந்தாண்டுகளின் சராசரியை ஒப்பிடும் போது 16 விழுக்காடு அதிகரித்துள்ளது.
கரும்புக்கும் நெல்லுக்கும் அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவித்து, கொள்முதல் செய்துவருவதால் அவற்றின் பயிரிடும் பரப்பு அதிகரித்துள்ளதாக வேளாண் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.