கருணாசுக்கு நாய் குணம் வந்துவிட்டது என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை புதூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சட்டபேரவை உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, மாணிக்கம் மற்றும் கட்சி நிர்வாகி கலந்து கொண்டனர்.
பின்னர செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி உதயகுமார், திருப்பரங்குன்றத்தில் திமுகவிற்கு வாக்கு வங்கி உள்ளது. ஆனால் வெற்றி பெறும் அளவிற்கு வாக்கு வங்கி கிடையாது என்றார்.அதே நேரம் திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை என்று அவர் வர்ணித்தார்.
கருணாஸ் எம்.எல்.ஏ , பொது மேடையில் முதலமைச்சர் பற்றி தவறாக பேசியதற்கு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நாயாக இருந்த என்னை சட்டபேரவைக்கு அழைத்து வந்தவர்கள் அதிமுகவினர் என சட்டப்பேரவையில் கருணாஸ் பேசியுள்ளார். இப்போது அவர் சொன்னது போல் அவருக்கு நாய் குணம் வந்துவிட்டது என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.