காவல்துறை அதிகாரியை அவதூறாக பேசிய வழக்கில் 30 நாட்களுக்கு ஜாமின் பெற்ற நடிகர் கருணாஸ் தினமும் இரண்டு காவல் நிலையங்களில் கையெழுத்திட சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல்துறை அதிகாரியை அவதூறாக பேசியதாக கடந்த 23 ஆம் தேதி கருணாஸ் எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கருணாஸ் ஜாமின் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை கருணாஸூக்கு 30 நாட்கள் ஜாமின் வழங்கி, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தினமும் காலை 8.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் 30 நாட்களுக்கு தினமும் காலை 10.30 மணியளவில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு ஜாமின் வழங்கினார்.