7 லட்சம் பேர் கலந்து கொள்ளும் எழுச்சி விழாவாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்படும், என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு எழுச்சி விழாவாக கொண்டாடப்படும் என்றார்.
நடிகர் கமல்ஹாசன் மக்களை சந்திப்பது பெரிய விசயம் அல்ல, மக்கள் ஆதரவு யாருக்கு என்பதைத் தான் இங்கு பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அதிமுக-வுக்குத்தான் மக்கள் ஆதரவு இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் திமுக-வுக்கும், காங்கிரஸுக்கும் பங்கு உண்டு என்று ராஜபக்ச குறிப்பிட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதன் அடிப்படையில் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே கண்டன கூட்டம் நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். ராஜபக்ச கூறியது குறித்து எதிர்கட்சிகள் மவுனம் சாதிப்பது ஏன் என்றும் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பினார்.