2019ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத பிளாஷ்டிக் பொருட்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை அமைச்சர் எம்.சி. சம்பத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
Discussion about this post