கங்கை நீரை புனிதமாக கருதி ஹரித்துவார் மற்றும் உன்னாவ் இடையில் வசிக்கும் மக்கள் அதனை பயன்படுத்துவதால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. சிகரெட் பாக்கெட்டுகளில், அது உடல்நலத்திற்கு கேடு என்ற எச்சரிக்கை வாசகம் இருப்பது போல, கங்கை நீரின் மாசு குறித்து அப்பகுதி மக்களுக்கு ஏன் அறிவுறுத்தப்படுவது இல்லை என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். எந்தப் பகுதியில் உள்ள நீர் பயன்படுத்துவதற்கு ஏற்றது என்பது குறித்த வரைபடங்களை தேசிய கங்கை தூய்மை குழு மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தங்களது இணையதளங்களில் வெளியிட வேண்டும் என்று தேசிய பசுமைப் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post