ஒரு மழைக்கே 86 லட்சம் பேர் வெளியேற்றமா?

ஜப்பானில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான இடங்களில் இருந்து 86 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு சாலைகள் மற்றும் வீடுகள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். பேரிடர் அறிவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வரும்நிலையில், சுமார் 86 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழைப் பாதிப்புக்கு இதுவரை 249 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அங்கு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version