சீனாவில் 470 கோடி ரூபாய்க்கு ஒரு ஓவியம் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
சீனாவில் புகழ்பெற்ற ஓவியராக இருப்பவர் ஸா வூ கி. இவர் ‘ஜூயின் அக்டோபர் 1985’ எனும் தலைப்பில் வரைந்த அரூப ஓவியம் ஏலம் விடப்பட்டது. சோதபீஸ் ஏல நிறுவனத்தின் ஹாங்காங் கிளையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் ஸா வூ கி ஓவியம் 470 கோடிக்கு ஏலம் போய் இருக்கிறது. 1920-ல் சீனாவில் பிறந்த ஸா வூ கி, 1948-ல் பாரிஸுக்கு இடம்பெயர்ந்தார். மேற்கத்திய நவீனத்துவக் கலையின் தாக்கம் கொண்ட அவர், கீழை நாடுகளின் தத்துவவியலையும் மேற்கத்திய கலையின் தொழில்நுட்பங்களையும் இரண்டறக் கலந்து அரூப ஓவியங்கள் வரையும் கலைத் திறன் படைத்தவர். 2013-ல் ஸா வூ கி இறந்த பிறகும் அவரது ஓவியங்கள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.