ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் , அக்டோபர் 1-ம் தேதி இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள 21 கடலோரப் பகுதி நாடுகள் சேர்ந்து IORA என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்பின் சார்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான கருத்தரங்கம் அக்டோபர் இரண்டாம் தேதி புதுடெல்லியில் நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ,
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் மற்றும் பிறநாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக நான்கு நாள் பயணமாக , அக்டோபர் 1-ம் தேதி அன்ட்டோனியோ குட்டரஸ் இந்தியா வருகிறார்.
பிரதமர் மோடி அறிவித்த தூய்மை இந்தியா திட்டத்தின் நான்காம் ஆண்டின் துவக்க நாளான ,அக்டோபர் இரண்டாம் தேதியன்று நடைபெறும் சர்வதேச துப்புரவு கருத்தரங்கிலும் அவர் கலந்து கொள்கிறார்.
அக்டோபர் மூன்றாம் தேதி சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பின் முதல் மாநாட்டையும் அவர் துவக்கி வைக்கிறார்.
Discussion about this post