தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில், மேம்படுத்தப்பட்ட இதய மாற்று அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச தரத்திற்கு நிகராக இருதய மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை அரங்கம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டு இருப்பதை சுட்டிக் காட்டினார்.
உயர்தர சிகிச்சையை அடுத்த கட்டமாக இரண்டாம் நிலை பெரு நகரங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சுகாதார திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 250 கோடி ரூபாய் அளவுக்கு விரிவாக்கப் பணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
Discussion about this post