.
இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன்? என இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்திய-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் அடுத்த வாரம் நியூயார்க் நகரில் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதுபற்றிய அறிவிப்பு வெளியான மறுதினமே பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரில் 3 போலீசாரை கடத்திச்சென்று சுட்டுக் கொன்றனர். இதனால் கோபமான இந்திய அரசு உடனடியாக நியூயார்க் நகரில் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.
இந்த விவகாரம் பாகிஸ்தானில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.‘இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு இணக்கமாக செயல்பட்டால், மோடிக்கு அது பாதகமாக அமையும் என்பதால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள பத்திரிகைகள் எழுதியுள்ளன.
இந்நிலையில் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அவசரமான நகர்வு என அந்நாட்டு இரு பெரிய எதிர்க்கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும் விமர்சனம் செய்துள்ளன. “ராஜதந்திர தோல்வி”க்கு இம்ரான்கான்தான் பொறுப்பு என்று கூறியுள்ள அக்கட்சிகள், பேச்சுவார்த்தையை நாடுவதற்கு முன்னதாக வீட்டுப் பாடத்தை முடிக்கவேண்டும் என கூறியுள்ளன.