நாடாளுமன்ற எம்.பி.,க்களின் சம்பளத்திற்காகக் கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரத்து 997 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், நாடாளுமன்ற எம்.பி.,க்களின் சம்பளத்திற்காக எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்று சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுடா கேள்வி கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதற்கு நாடாளுமன்ற லோக்சபா செயலகம் அனுப்பி உள்ள பதிலில், கடந்த 4 ஆண்டுகளில், எம்.பி.,க்களின் சம்பளம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்காக, ஆயிரத்து 997 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு லோக்சபா, எம்.பி.,க்கு, ஆண்டுக்கு 71.29 லட்சம் ரூபாயும், ராஜ்யசபா எம்.பி.க்கு 44.33 லட்சம் ரூபாயும் செலவாகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, லோக்சபாவில், 2 நியமன, எம்.பி.,க்கள் உட்பட மொத்தம் 545 எம்.பி.க்கள் உள்ளனர் என்றும், ராஜ்யசபாவில் 245 எம்.பி.க்கள் உள்ளனர் என்றும் நாடாளுமன்ற லோக்சபா செயலகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post