தமிழகம் முழுவதும் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில், சுமார் 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுள்ளன.
ஓராண்டு காலமாக தமிழகம் முழுவதும் உள்ள 31 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்துக்கான நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியது. அதன்படி, 5 ஆயிரத்து 340 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்ட 2 ஆயிரத்து 357 முடிவுற்ற திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.
5 ஆயிரத்து 747 கோடி ரூபாய்க்கு 3 ஆயிரத்து 214 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் 5 ஆயிரத்து 464 கோடி ரூபாய்க்கு 26 ஆயிரத்து 392 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
மொத்தம் 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.