பெண்களால் 48 நாட்கள் விரதம் இருக்க முடியாது என்பதால், அதற்காக தனி விதி வகுக்கப்பட வேண்டும் என்று சபரிமலை விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை வரவேற்றுள்ள அவர், அந்தக் கோயிலுக்கு செல்ல பெண்களால் 48 நாட்கள் விரதம் இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மாத விலக்காகும் நாட்களில் மலையேறும் போது ரத்த வாடைக்கு வன விலங்குகள் வரக் கூடும் என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
எனவே, பெண்களை எத்தனை நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு வர வேண்டும் என்று புதிய விதி உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, சபரிமலை வரும் பெண்கள் அணிய வேண்டிய ஆடை குறித்தும் வரைமுறைகள் வகுக்கப்பட வேண்டும் எனவும் கஸ்தூரி கேட்டுக் கொண்டுள்ளார்.