நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்தால் அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களின் எல்லையாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீசிச் செல்கின்றனர். இதன் காரணமாக 19 வாகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டார். அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை சோதனை சாவடிகளில் சோதனை செய்யவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அபராதம் வசூலிக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை இயற்கை ஆர்வலர்களிடையேயும், பொது மக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.