உதவிக்கரம் நீட்டிய அமிதாப் பச்சன்

மும்பையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்தாபச்சன், விவசாயிகள் தற்கொலையை நினைத்து எப்போதும் கவலைப்பட்டு வருவதாக தெரிவித்தார். 15 ஆயிரம் ரூபாய் கடனைக் கூட செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை நினைத்து வேதனைப் பட்டதாக தெரிவித்தார். தற்போது வங்கியில் கடனைச் செலுத்த முடியாத 200 விவசாயிகளின் பெயர் பட்டியலை பெற்று, அவர்களின் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தியதாக குறிப்பிட்டார். இதேபோல் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி ருபாய் நிதி அளித்துள்ளதாகவும் அமித்தாபச்சன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version