உதகையில் 3 மணி நேரமாக பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது
உதகையில் இன்று காலை வெயில் வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. ஆனால், பகல் 12 மணி முதல் கனமழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. தொடர் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளும் அவதிக்கு ஆளாகினர். நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்ததை விட அதிகமாகப் பெய்தது. இதனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளவை எட்டிய பைக்காரா, எமரால்டு, அவலாஞ்சி, குந்தா மற்றும் அப்பர் பவானி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.
Discussion about this post