உதகையில், தனியாக சுற்றி வரும் யானை, குடியிருப்புகளை நாசப்படுத்தி வருவதால், பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கெத்தை பகுதியில் , கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை ஒன்று , கடந்த 20 நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் உலவி வருகிறது.
அதிகாலை நேரத்தில் அந்த ஒற்றை யானை கெத்தையில் உள்ள ஒரு வீட்டை இடித்துள்ளது. உடனே விட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து ஒட்டம் பிடித்துள்ளனர். பின்னர் அந்த யானை அருகிலிருந்த கோவிலுக்குள் புகுந்து கோவிலை சேதப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இந்த சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர் . இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் முகாமிடும், இந்த ஒற்றை யானையை விரட்ட, வனத்துறையினர் ,நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .