உதகையில் குடியிருப்பு பகுதியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த ஆட்டை, அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை தாக்கி இழுத்து சென்ற காட்சி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
உதகை நொண்டி மேடு குடியிருப்பு அருகே உள்ள புல்வெளியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று, ஆட்டை வேட்டையாடியது. இந்த காட்சி பார்ப்பவர்களுக்கு பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. வழக்கமான இடத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது ஒரு ஆட்டை மட்டும் குறி வைக்கும் சிறுத்தை திடீரென பாய்ந்து அதன் கழுத்தை சரியாக கவ்விப் பிடித்து ஓடும் காட்சி, கேமராவில் தத்ரூபமாக பதிவாகியுள்ளது. உதகையில் குடியிருப்பு பகுதி அருகே நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பயத்தில் உறைந்து போயுள்ளனர். ஆட்டை கவ்விக் கொண்டு ஓடிய அந்த சிறுத்தை மீண்டும் அதே பகுதிக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், அப்பகுதி வாசிகள் வெளியே நடமாடுவதற்கு பயந்து போய் உள்ளனர். வனத் துறையினர் மீண்டும் அந்த சிறுத்தை அப்பகுதிக்கு வராதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.