உடல் உறுப்பு தானம் பெற பதிவு செய்யும் நோயாளிகளுக்கு ஆதார் கட்டாயம் என தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிசிச்சை மையம் அறிவித்துள்ளது.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது. ஆனால், உடல் உறுப்பு தானம் பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
இது குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில், உடல் உறுப்பு தானம் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிசிச்சை மையம் தெரிவித்துள்ளது. நோயாளி வெளிநாட்டை சேர்ந்தவராக இருந்தால் சம்பந்தப்பட்ட தூதரகங்களில் தடையில்லா சான்றிதழ் பெறுவது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.