ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையிலான விசாரணைக் குழு அமைக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த குழுவில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். இந்த குழு 2 வாரங்களில் பொறுப்பேற்று கொண்டு, 6 வாரங்களில் ஆய்வுகளை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் அரசின் தரப்பை கேட்காமல் விசாரணை குழு அமைக்கப்பட்டதாகவும், இந்த குழுவை அமைக்க பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிடப்பட்டது. எனவே, பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில்இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
Discussion about this post