வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஏசி, பிரிட்ஜ் மீதான வரி 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
கணக்கு பற்றாக்குறையை சரி செய்வதற்காக சுங்க வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிவாலும், இறக்குமதியை குறைக்கவும் மத்திய அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி 19 பொருட்கள் மீதான சுங்க வரி உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது.
தங்க நகைகள் மீதான சுங்க வரி 15-ல் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரேடியல் டயர் மீதான இறக்குமதி வரி 10-ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஸ்பீக்கர், காலணிகள் மீதான வரி 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
ட்ரங்க் பெட்டி, சூட்கேஸ் உள்ளிட்ட பொருட்களின் வரி 10-ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.
Discussion about this post