இருபிரிவினரிடையே மோதலை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் கருணாஸ் மீது வழக்கு!

முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய விவகாரத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16 ம் தேதி நடந்த ஆர்பாட்டம் ஒன்றில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ வுமான கருணாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

அதேபோல காவல்துறை அதிகாரிகள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இது குறித்து விசாரணை செய்த நுங்கம்பாக்கம் போலீசார், அமைதியை சீர்குலைப்பது, இரு பிரிவினரிடையே கலவரத்தைத் தூண்டுவது, அதிகாரியை மிரட்டுவது, கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version