குடியரசுத்தலைவர் ஆட்சியில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது.
இதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து டிவிட்டரில் அவர், “உங்களுடைய ‘எப்போதும் சிறந்த நண்பர்’ பிரதமர் இருக்கும் போது 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரபேல் ஒப்பந்தம், போதிய துறைசார் அனுபவம் இல்லாமலேயே கிடைத்து விடும். ஆனால் பொறுத்திருங்கள், அவசரப்பட்டு முடிவுக்கு வராதீர்கள், இன்னும் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்கள் 4 லட்சம் பேர்களும் இந்த மருத்துவக் காப்பீட்டை ,உங்கள் காப்பீட்டு நிறுவனத்தில்தான் வாங்கியே ஆகவேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தப்படுவார்கள்” என்று சாடியுள்ளார் ராகுல் காந்தி.
Discussion about this post