ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி ரூ.90,000 வரை பணத்தை இழந்த சிறுவனுக்கு, அவனுடைய பெற்றோர் தண்டனை வழங்கினர்.
iராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே மேலக்கிடாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றுள்ளார். அப்போது, அவரது கணக்கில் பணமே இல்லை என வங்கி மேலாளர் தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து 7ஆம் வகுப்பு பயிலும் தன் மகன் ரோஷனிடம் கேட்டுள்ளார்.
அப்போது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்ததை ஒப்புக் கொண்ட ரோஷன், ஆன்லைனில் குறிப்பிட்ட ஒரு விளையாட்டை விளையாடுவதற்காக, தினமும் 300 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ததாகக் கூறினான். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ரோஷனின் பெற்றோர், தண்டனையாக அவனை 90,000 வரை எண்களை நோட்டில் எழுதுமாறு கண்டித்தனர்.
3,000 வரை எழுதிய நிலையில், கை வலித்ததாக ரோஷன் தன் பெற்றோரிடம் கூறியதை அடுத்து, இதுபோன்ற தவறை இனி செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி, ஆறுதல்படுத்தினர்.