ஆரணியில் பெற்றோரை இழந்து வறுமையில் சிக்கித் தவித்த ஆனந்தியின் குடும்பத்திற்கு ரூ.30,000 மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கப்பட்டது.
ஆரணியை அடுத்த கனிகிலுப்பை கிராமத்தில் பெற்றோரை இழந்து வறுமையில் வாடிய ஆனந்திக்கு சத்துணவு அமைப்பாளர் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கே எஸ் கந்தசாமி வழங்கினார். இது தொடர்பாக செய்தி ஊடகங்களில் வெளியானது.
இந்தநிலையில், கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பசியாற சோறு என்ற அமைப்பைச் சேர்ந்த இராஜாசேதுபதி என்பவர், ஆனந்தி குடும்பத்துக்கு ரூ.30,000 மதிப்பிலான பொருட்களை இலவசமாக வழங்கி உள்ளார். பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட டிவி, துணிகள், மளிகை சாமான்கள் உள்ளிட்ட 30 பொருட்களை அவர் வழங்கினார். அவரது இந்தச் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.