ஆந்திர சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவு பெறுகிறது.
எனவே, தேர்தல் நெருங்குவதால், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், ஆட்சியை கைப்பற்ற ஓய்எஸ்ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் பகீரத முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.
நலத் திட்டங்களை முன்வைத்து சந்திரபாபுவும், அரசின் குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி ஜெகனும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தநிலையில், ஆந்திராவின் அடுத்த முதலமைச்சர் யார் என்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி வர வேண்டும் என்று, 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு 38 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணுக்கு 5 சதவீதம் ஆதரவு மட்டுமே கிடைத்து இருக்கிறது.
கருத்துக் கணிப்பு முடிவால், அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி ஆந்திர மக்களிடையே விவாத பொருளாகி உள்ளது.
Discussion about this post