ஆதார் உள்பட 5 முக்கிய வழக்குகளில் இன்று தீர்ப்பு

ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் திட்டம், ஆதார் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 31 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இந்த விசாரணை கடந்த மே மாதம் முடிவடைந்தது.

 

பின்னர் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்தநிலையில், இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக தெரிகிறது. இதேபோன்று, நீதிமன்ற அலுவலை நேரடி ஒளிபரப்பு செய்தல் தொடர்பான மனு, மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான மனுக்கள், வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பாக மனுக்கள், குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு உள்ளிட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version