ஆதார் அட்டைக்கு சட்ட அங்கீகாரம், அரசு சேவை மற்றும் வங்கி சேவையை பெற ஆதார் அட்டை கட்டாயம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 4 பேர் கொண்ட அமர்வு விசாரித்த இந்த வழக்கில், ஆதார் அட்டை சட்ட அங்கீகாரம் கொண்டது எனவும், அரசு சேவையை பெற ஆதார் கட்டாயம் என்றும், வங்கிகணக்கு, செல்ஃபோன் எண், பள்ளி,கல்லூரி சேர்க்கை ஆகியவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை என்றும் தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, உச்சநீதி மன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும், ஆதார் அட்டையால் அரசுக்கு சுமார் 90 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.