உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்குகளை விசாரிப்பதில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று, புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதியாக பொறுப்பற்ற பிறகு வழக்கறிஞர்களை அவர் சந்தித்து பேசினார். அவசர வழக்காக சிலவற்றை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அவசர வழக்குகளுக்கு என வழிமுறைகளையும் தகுதிகளையும் வகுத்த பின்னர் எந்த வகையில் முறையிடலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
முக்கியமான வழக்குகளை தவிர மற்றவற்றை அவசர வழக்காக முறையிட வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். தூக்கிடும் வழக்கு, ஒருவரை வெளியேற்றும் வழக்கு போன்றவற்றை அவசர வழக்காக விசாரிக்கலாம் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.