அனுபவங்களை புத்தகமாக எழுதிய வெங்கையா நாயுடு

குடியரசு துணைத் தலைவராக வெங்கய்யா நாயுடு பதவியேற்று ஒராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை புத்தகமாக அவர் தொகுத்துள்ளார். இந்த புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். “Moving on, Moving Forward, A year in Office” என்ற அந்த புத்தகம், 245 பக்கங்களை கொண்டுள்ளது. நாட்டின் முக்கிய விவகாரங்களில் வெங்கய்யா நாயுடுவின் செயல்பாடுகள் மற்றும் பங்களிப்பு ஆகியவை இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன் சிங், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version