அடேங்கப்பா… நிர்மலா தேவி வழக்கில் 160 பக்கங்களில் குற்றப்பத்திரிக்கையா?

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் ஆயிரத்து 160 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது.

விருதுநகர் மாவட்டம்  அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றிய  நிர்மலா தேவி, மாணவிகளை தவறான வழியில் நடக்க தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.  3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது. கருப்பசாமியின் ஜாமின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இந்த வழக்கில் யாருக்கும் ஜாமின் வழங்க முடியாது என மறுத்துவிட்டது. இவ்வழக்கில் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் சி.பி.சி.ஐ.டி. இறுதியான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், செப்டம்பர்  24ஆம் தேதியில் இருந்து 6 மாத காலத்திற்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், வழக்கு தொடர்பாக ஆயிரத்து 160 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை, சிபிசிஐடி விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. இதனடிப்படையில், இவ்வழக்கு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

Exit mobile version