அடேங்கப்பா, தேர்தல் நடத்த இவ்வளவு செலவு ஆகுமா!?

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 4 ஆயிரத்து 555 கோடி ரூபாய் செலவாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் விருப்பத்திற்கு சட்ட ஆணையம்  ஒப்புதல் அளித்துள்ளது. இந்தநிலையில் நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்துவதால், ஆகும் செலவுகள் குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தினால், ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்க நேரிடும் என்று கூறியுள்ளது. இதற்காக லட்சக்கணக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த  4 ஆயிரத்து 555 கோடி ரூபாய் செலவாகும் என்று குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்க மேலும் சில ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவாகும் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

Exit mobile version