ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம், சமுதாய வளைகாப்பு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பி.டி தியாகராய கலையரங்கில் நடைபெற்றது.
இதில், தி நகர், அசோக் நகர், மைலாப்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட 5 தொகுதிகளைச் சேர்ந்த 500 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, எம்.பி.ஜெயவர்தன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் கலந்துகொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமமிட்டு நலங்கு வைத்து பரிசு பொருட்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சரோஜா, தாய் சேய்க்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்றும், ஊட்டச் சத்து இல்லாத குழந்தையே இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரோஜா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் படி தமிழ்நாடு முழுவதும் 71, 782 பேருக்கும், சென்னையில் 2, 700 பேருக்கும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்றார்.