வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு – பிரதமர் மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

பாஜக ஆட்சியில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகப் பிரதமர் மோடி மீது, ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்திய அரசு தலைமையிலான பாஜக ஆட்சியில், வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் திட்டங்கள் இந்தியாவின் வேலைவாய்ப்புக்களைக் கொன்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், வேலை இல்லா திண்டாட்டம் தொடர்பாக, ஹஃபிங்டன் போஸ்ட் என்ற அமைப்பு, இந்தியாவின் வேலைவாய்ப்பு தொடர்பாக ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையை ராகுல் காந்தி மேற்கொள் காட்டி உள்ளார்.

அத்துடன், ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் லிமிடெட் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு, திறமையில்லாதவர்களிடம் போர் விமானம் தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். அதே சமயம் திறமையுள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் கடந்த பல ஆண்டுகளாக வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொண்டு வருவதாகவும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Exit mobile version